உள்ளாட்சி தேர்தல்: தர்மபுரி மாவட்டத்தில் 230 வாக்குச்சாவடிகள் அமைப்பு
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுப்பு;
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. வருகிற 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 -தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 192 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலையொட்டி மொத்தம் 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்கள் வாக்குச்சாவடி 37-ம், பெண்கள் வாக்குச்சாவடி 37-ம், பொது வாக்குச்சாவடிகள் 156-ம் அமைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 24 ஆண் வாக்குச்சாவடியும், 24 பெண் வாக்குச்சாவடியும், 9 பொது வாக்குச்சாவடியும் என மொத்தம் 57 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 159 வார்டுகள் உள்ளன. இதில் 13 ஆண் வாக்குச்சாவடியும், 13 பெண் வாக்குச்சாவடியும்,147 பொது வாக்குச்சாவடியும் என மொத்தம் 173 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 11 ஆண் வாக்குச்சாவடியும், 11 பெண் வாக்குச்சாவடியும், 8 பொது வாக்குச்சாவடியும் என மொத்தம் 30 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாலக்கோடு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 2 ஆண் வாக்குச்சாவடியும், 2 பெண் வாக்குச்சாவடியும்,16 பொது வாக்குச்சாவடியும் என மொத்தம் 20 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள18 வாக்குச்சாவடியும், பொது வாக்குச்சாவடியாகவே அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடத்தூர், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், பி. மாமல்லபுரம் ஆகிய பேரூராட்சிகள் அனைத்திலும் தலா 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 15 வாக்குச் சாவடிகளும் பொது வாக்குச் சாவடிகளாகவே அமைக்கப்பட்டுள்ளது.