ஆசையாய் பைக் வாங்கிய இரண்டே நாளில் விபத்தில் உயிரிழந்த மாணவர்
திட்டக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கட்டையில் மோதி இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலி;
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளி அருகே எழுத்தூரைச் சேர்ந்த ராமநாதன் மகன் பிரசாந்த்( 22 ). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு வராத்திற்கு முன்பு கோயம்புத்தூரில் இருந்து சொந்த ஊரான எழுத்தூர் வந்த இவர் தன் அம்மாவிடம் கே.டி.ம் பைக் வாங்கி தரச்சொல்லி தகராறு செய்ததுடன், கொண்டு பைக் வாங்கி தரவில்லை என்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி அடம் பிடித்தாராம். இதையடுத்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புதிய பைக் 3லட்சம் ரூபாயக்கு வாங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு தொழுதூர் நோக்கி செல்லும் போது, தனியார் பள்ளி வளைவில் அதிவேகமாக வளைத்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார், மாணவர் பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா,க திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.