திட்டக்குடி அருகே மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
திட்டக்குடி அருேகே மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.;
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வையங்குடி கிராமத்தில் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 100 ஆண்கள் 88 பெண்கள் மொத்தம் 188 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட மாணவர்களில் 8மாணவர்கள் 1 மாணவி உட்பட 9 மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவ மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர், கிராம இளைஞர்கள் உதவியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்துள்ளனர்.
பின்னர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதா? அல்லது காலாவதியான முட்டைகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.