கடலூர்: ஆற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் உடல் 3 நாளுக்கு பின் மீட்பு
கடலூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் உடல் 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.;
உயிரிழந்த பள்ளி மாணவர் சூர்யா
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் மணிமுத்தாறில் நேற்று முன்தினம் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தவறி விழுந்தனர். இதில் ஒருவரை அங்கிருந்த இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்டு கரை சேர்த்தார். மற்றொரு மாணவரான சூர்யா ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
தீயணைப்பு வீரர்கள் கடந்த மூன்று நாட்களாக தேடிவந்த நிலையில் இன்று மேலமாத்தூர் அணைக்கட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கட்சி பெருமநத்தம் கிராமம் அருகே மணிமுத்தாறில் சூர்யாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
சூர்யா உடலை உடற்கூறு ஆய்விற்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..