திட்டக்குடி அருகே சாலை பழமையான மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு

திட்டக்குடி அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக பழமையான மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2021-07-12 02:00 GMT

மாதிரி படம்

திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் கிராம பஸ்நிலையத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு அரச மரங்கள் உள்ளது.இந்த மரங்கள் உட்பட 9 மரங்களை சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்ற முடிவெடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏலம் விட்டனர்.

மிகவும் பழமை வாய்ந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போத்திரமங்கலம் பஸ் நிலையத்தில் பசுமைத் துாண்கள் அமைப்பின் அறிவழகன் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் கோவிந்தசாமி, மாயகிருஷ்ணன், வேலாயுதம், ஜான்செங்குட்டுவன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மரங்கள் அகற்றத்தை ரத்து செய்யக்கோரி, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Tags:    

Similar News