கடலூர்: திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய கூட்டத்தை தி.மு.க. தொடர்ந்து புறக்கணிப்பதால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-24 14:28 GMT

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தை தி.மு.க. கூட்டணி கட்சியினர் புறக்கணித்தனர்.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்வி ஆடியபாதம் ஒன்றிய குழு தலைவராக உள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும்  வளர்ச்சி திட்டங்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் குறுகிய நோக்கத்தோடு பொருந்தாத காரணங்களைக் கூறி வளர்ச்சித் திட்டங்களுக்கு  நிதி ஒதுக்குவது  சம்பந்தமான தீர்மானங்களை பற்றி விவாதிக்காமல்  வருகைப் பதிவேட்டில்  மட்டும் கையெழுத்து போட்டுவிட்டு வெளிநடப்பு செய்து விடுவதாகவும் தி.மு.க.  உறுப்பினர்களின் செயலால் நல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் எதுவும் நடைபெறாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Tags:    

Similar News