ராமநத்தத்தில் அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்
திட்டக்குடி அருகே ராமநத்தத்தில், AIM FOR SAVE அறக்கட்டளை சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.;
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் தனியார் திருமண மண்டபத்தில், எய்ம் பார் சேவா அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தடா.பெரியசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், சத்தியா குருகுலம் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, மருத்துவர் சேகர், வழக்கறிஞர் பிரபாகரன் உள்ளிட்ட பலர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.