திட்டக்குடியில் மக்காச்சோளத்தை சாப்பிட்ட 5 மயில்கள் உயிரிழப்பு
திட்டக்குடியில் குருனை மருந்து கலந்த மக்காச்சோளத்தை சாப்பிட்ட 5 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.;
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தில் விவசாய நிலங்களில் மக்காசோளம் விதை விதைத்துள்ளனர். மக்காச்சோள விதைகளை விலங்குகள் சாப்பிடாமல் இருக்க வயல் பகுதியில் குருனை மருந்து போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு வந்த மயில்கள் விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த குருனை மருந்தை தின்றதால் சம்பவ இடத்திலேயே 4 ஆண் மயில், ஒரு பெண் மயில் உட்பட ஐந்து மையில்கள் இறந்தன.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் வனத்துறை அலுவலர்கள் மயில்களை உடற்கூறு ஆய்வு செய்து காப்புக் காட்டில் புதைத்தனர்.
மேலும் விசாரணையில் வயலின் உரிமையாளர் ஆ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (58) விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். வயலில் ஒரே நேரத்தில் 5 மயிலகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.