கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மருத்துவ முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உடன் உதயநிதி ஸ்டாலின்

Update: 2021-07-03 13:04 GMT

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் V.C. கணேசன் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒன்றரை கோடியை தடுப்பூசியை மக்கள் செலுத்தி கொண்டதாகவும் தெரிவித்தார் மேலும் தற்பொழுது தமிழகத்திற்கு ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் தற்பொழுது இருப்பு 6 லட்சத்திற்கும் மேலாக தடுப்பூசி உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் நோய்தொற்று எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும் தெரிவித்தார் நேற்றைய தினம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News