கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று

கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று; அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-06-03 17:30 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு சேலம், விழுப்புரம் மாவட்டத்தில் இந்த நோய் தொற்று காணப்பட்டது. அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 3 பேர் இறந்த நிலையில், 9 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் புவனகிரியைச் சேர்ந்த 38 வயது ஆண், விருத்தாசலத்தைச் சேர்ந்த 60 வயது ஆண் ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேபோல் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆணுக்கும் கருப்பு பூஞ்சை தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News