மணல் கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓ.வை தாக்கிய ஓய்வு பெற்ற ஓட்டுநர் கைது

ஏரி வண்டல் மண் அள்ளியது தொடர்பான ஏற்பட்ட பிரச்சனையில் முன்விரோதம் காரணமாக கிராம நிர்வாக அலுவலர் கன்னத்தில் அறைந்த ஒய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் கைது

Update: 2023-12-14 14:44 GMT

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் அருகே கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வனஜா முனியன் (62), அரசு விரைவு பேருந்து நடத்துனராக (SETC)பணியாற்றி ஓய்வு பெற்றவர். சொந்த பணிக்காக ஸ்ரீமுஷ்ணம் வட்டாசியர் அலுவலகத்தில் வந்தபோது கிராம நிர்வாக அலுவலரான சர்மா (30) என்பவரை முன்விரோதம் காரணமாக தாக்கிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த 6 மாதம் முன் வனஜா முனியன், ஏரி வண்டல் மண் அள்ளியதை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்த கிராம நிர்வாக அலுவலர் சர்மா மீது கடும் கோபம் கொண்ட நிலையில், ஸ்ரீமுஷ்ணம் வட்டாசியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரை கண்ட வனஜா முனியன் அவரிடம் வாக்குவாதம் செய்து"நீ இன்னும் இங்கு தான் இருக்கிறாயா?" மணல் அள்ள விடாமல் தடுத்தாயே என கோபத்தோடு கேட்டுக் கொண்டே அவரை கன்னத்தில் அறைந்து கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் வனஜா முனியன் மீது ஆபாசமாக பேசுதல் அரசு ஊழியரை தாக்குதல் , அரசு ஊழியரை பணி செய்யாமல் தடுத்தல் , கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News