ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வே.கணேசன் வழங்கினார்
நெல்லிக்குப்பத்தில் ஆயிரம் பேருக்கு அரிசி காய்கறிகளை தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன் வழங்கினார்;
நெல்லிக்குப்பத்தில் ஆயிரம் பேருக்கு அரிசி காய்கறிகளை அமைச்சர் சி.வே.கணேசன் வழங்கினார்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இன்று நெல்லிக்குப்பம் ஆர்.ஆர்.பள்ளியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன் கலந்து கொண்டு ஏழை எளிய மாற்றுத்திறனாளிகள்,ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 1000பேருக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி நெல்லிக்குப்பம் திமுக நகர செயலாளர் ப.மணிவண்ணன் தலைமையிலும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளருமான ராதாகிருஷ்ணன் முன்னிலையிலும், நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக முன்னனி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.