கடலூர் வாக்காளர் சேர்ப்பில் முறைகேடு: தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல்
கடலூர் வாக்காளர் சேர்ப்பில் முறைகேடு நடந்ததாக கூறி தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி தொரப்பாடி பேரூராட்சி புதுப்பேட்டையில் வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் அ.தி.மு.க.வினர் அதிகாரிகள்.ஒத்துழைப்புடன் அதிக அளவு வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. உண்மைக்கு புறம்பாகமுறை கேடாக அ.தி.மு.க.வினர் செயல்படுவதாக குற்றம்சாட்டி தி.மு.க. மாணவரணி மாவட்ட துணை செயலாளர் சதாசிவம் தலைமையில் தி.மு.க.வினர்பண்ருட்டி -சித்தூர் சாலையில் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு திடீர் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல்அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவஇடத்திற்கு விரைந்துசென்று சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சு வார்த்தையின்போது வாக்காளர் சேர்க்கை முகாமில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அ.தி.மு.க.வினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார் கூறினார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்டஅதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் சாலை மறியலை கைவிட்டு தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.இதனால் பண்ருட்டி-சித்தூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.