பண்ருட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் மோதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-03 15:37 GMT

பண்ருட்டி அருகே சாலை மறியல் செய்த  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பாலூர் கடைவீதியில் கடந்த மாதம் ஜனவரி இரண்டாம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வைக்க ஏற்பாடு செய்தனர்.தகவல் அறிந்து காவல் துணைக் கண்காணிப்பாளர் சபியுல்லா அரசின் அனுமதிபெற்ற பிறகே கொடிக்கம்பங்கள் வைக்க வேண்டும், கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென்று வி.சி.க.வினர் கொடிக்கம்பத்தை வைத்துள்ளனர்.உடனே போலீசார் அனுமதி இல்லாமலே கொடிக்கம்பம் வைக்கக்கூடாது என்று.தடுத்து உள்ளனர். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த.நிர்வாகிகள் பண்ருட்டி - கடலூர் சாலையில் சுமார் 5 மணி முதல் 10 மணி வரைசாலை மறியலில் ஈடுபட்டனர்

அப்பொழுது அவர்கள் தி.மு.க. பா.ம.க. உட்பட அனைத்துக் கட்சிக்கொடிகளும் அப்பகுதியில் இருக்கும் பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகொடியை மட்டும் ஏன் வைக்க கூடாது என்று தமிழக அரசையும் காவல் துறையையும்கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், வட்டாட்சியர்சிவகார்த்திகேயன், காவல் துணைக் கண்காணிப்பாளர் சபியுல்லா மற்றும்போலீசார் சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

பேச்சுவார்த்தையில் உடன்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News