நிற்காமல் செல்லும் கட்டணமில்லா மகளிர் பேருந்துகள்- பெண்கள் குமுறல்
கடலூரில் கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிற்பது இல்லை என பெண்கள் குமுறி உள்ளனர்.;

அரசு நகரப்பேருந்து (மாதிரி படம்)
தமிழக அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் அனைவருக்கும் இலவச பயணம் செய்ய அரசாணை வெளியிட்டது
திட்டம் நடைமுறைக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் இத்திட்டம் எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது என்று மகளிர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
தற்போது வைரலாகி கொண்டிருக்கும் வீடியோ பதிவில் கடலூர்- பண்ருட்டி திருவந்திபுரம் வழியாக செல்லும் 16ம் என் கொண்ட பேருந்து எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் செல்கின்றன, ஒரு பேருந்து நிற்கவில்லை என்றாலும் பரவாயில்லை தொடர்ந்து நான்கு பேருந்துகளும் நிற்காமல் செல்கின்றன. இதனால் எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.
நாங்கள் காசு கொடுத்து செல்கிறோம் எங்களைப் பேருந்தில் ஏற்றி செல்லுங்கள் என்று நடத்துனரிடம் முறையிட்டாலும் அந்த பேருந்துகள் நிற்பதில்லை.
இலவச மகளிர் பேருந்து நிற்காமல் செல்வது வழக்கம் ஆகிக்கொண்டிருக்கிறது. உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வீடியோ பதிவில் பெண்கள் குமுறி உள்ளனர்.