கடலூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நீர்வரத்து அதிகமானதால் ஆற்றில் குளிக்கச் சென்ற இரட்டையர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.;
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாகவும் விழுப்புரத்தில் நேற்று முதல் பெய்து வரும் தொடர்மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது,
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முள்ளிகிராம்பட்டு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் மாதவன் (21)மற்றும் மகள் மாளவிகா (21) இருவருடன் பக்கத்து வீட்டு பையன் லோகேஷ்(16) ஆகிய மூவரும் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில் ஆற்று நீரில் சிக்கியதாக நெல்லிக்குப்பம் காவல் துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் லோகேஷ் மாளவிகா ஆகிய இருவரையும் பிணமாக மீட்டனர்.மாதவனை தேடும் பணிகள் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.