பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
பண்ருட்டி அருகே பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.;
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எம். ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மணிகண்டன்.வயது 21, மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருக்கும் நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதனையடுத்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் ஆய்வாளர் வள்ளி வழக்குபதிவு செய்து மணிகண்டனை பிடித்து விசாரணை செய்தார்.
விசாரணையில் மணிகண்டன் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானதால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.