கடலூர்: பண்ருட்டி அருகே புலவனூர் கிராமத்தில் மனுநீதி நாள் விழா
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புலவனூர் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா புலவனூர் கிராமத்தில் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் மனுநீதி நாள் விழா நடைபெற்றது.
தாசில்தார் பிரகாஷ் வரவேற்று பேசினார். சிறப்புதிட்ட தாசில்தார் பன்னீர்செல்வம், வட்டவழங்கல் அலுவலர் மோகன், துணை தாசில்தார் சிவகுமார், வருவாய்ஆய்வாளர்கொளஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் வீட்டுமனை பட்டா,முதியோர் உதவிதொகை ரேசன்கார்டு ஆகியவை கோரி நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன.விழாவில் 27 பேருக்கு மனைப்பட்டா,10பேருக்கு முதியோர்உதவிதொகை,13பேருக்கு ரேஷன் கார்டு ஆகியவை வழங்கப்பட்டது.
புலவனூர்பஞ்சாயத்து தலைவர்அன்னக்கிளி சதாசிவம், புலவனூர் கிராமநிர்வாக அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா,சங்கர்,கிராமநிர்வாக அலுவலர்கள் பழனிசாமி மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் ஜானகிராமன்,நந்தகோபால் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்