பண்ருட்டி அருகே ரூ. 4 கோடி வரதட்சணை கேட்ட 6 பேர் மீது போலீஸ் வழக்கு

பண்ருட்டி அருகே ரூ.4 கோடி வரதட்சணை கேட்டதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2021-09-10 15:05 GMT

காவல் நிலையம் (பைல் படம்)

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்த கருணாமூர்த்தி மகன் சீனிவாசன் (வயது) இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார்  சீனிவாசனுக்கும்வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகள் கெஜலட்சுமி என்பவருக்கும் கடந்த 9.7.2014 அன்று இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது

கெஜலட்சுமிக்கு லேசாக காது கேட்காது என்றும் சரியாக பேச முடியாது என்றும் கூறப்படுகிறது இருப்பினும் அதைப் பற்றி அறிந்து தான் சீனிவாசன் கெஜலட்சுமியை திருமணம் செய்து செய்துள்ளார்.

திருமணத்தின்போது சீனிவாசனின் பெற்றோர் வரதட்சணையாக 100 பவுன் நகை 5 கிலோ வெள்ளி பாத்திரங்கள் மற்றும் கார் வாங்க ரூபாய் 5 லட்சம் வரதட்சணையாக தரவேண்டும் என்று பெண்வீட்டாரிடம் கேட்டுள்ளனர் இதில் 80 பவுன் நகையும் மற்றும் 3 லட்சம் சீர்வரிசைப் பொருட்களை கெஜலட்சுமியின் பெற்றோர் திருமணத்தின்போது கொடுத்தனர் மீதி உள்ள சீர்வரிசைகள் பின்னர் தருவதாக கூறியுள்ளனர்

இதற்கிடையில் திருமணமான 6 மாதத்திலேயே கெஜலட்சுமியிடம் வரதட்சணையாக தரவேண்டிய சீர்வரிசை மற்றும் அவரது தாய் பெயரில் உள்ள ரூபாய் 4 கோடி மதிப்புள்ள சொத்து ஆகியவற்றை தரவேண்டும் என்று சீனிவாசன் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு உடந்தையாக சீனிவாசனின் தாய்,லட்சுமி சகோதரிகள் சியாமளா, விமலா, புவனா மற்றும் விமலாவின் கணவர் காசிலிங்கம் ஆகியோர் ஒன்று சேர்ந்து கெஜலட்சுமியை தனி அறையில் அடைத்து கொடுமை படுத்தி அவருடைய குறையையும் அவர்கள் சுட்டிக் காட்டி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது

இதுகுறித்து கெஜலட்சுமி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் சீனிவாசன் உட்பட  ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News