தமிழக வேளாண்மை பட்ஜெட்: விவசாயிகள் வரவேற்பு

தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

Update: 2021-08-14 13:56 GMT

தமிழக வேளாண்மை பட்ஜெட்டை வரவேற்று விவசாயிகள் இனிப்புகளை வழங்கினர்

தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கும் காகிதமில்லாத இ.பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார் . இதில் நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்தியும், கரும்புக்கான விலை ரூபாய் 2707ல் இருந்து கூடுதலாக 150 ரூபாய் டன் ஒன்றுக்கு அறிவித்த வேளாண் துறை அமைச்சருக்கும் தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் நெல்லிக்குப்பத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கரும்பு விவசாயிகள் சங்கம் தலைவர் தென்னரசு, கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டர்.

Tags:    

Similar News