பண்ருட்டி அருகே சித்தேரி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பண்ருட்டி அருகே செட்டிபாளையம் சித்தேரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது;
சித்தேரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் அகற்றப்பட்டது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்கு செட்டிபாளையத்தில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் பள்ளி, கல்லூரிகளும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஏரி அளவிடும் பணி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை அங்கு செட்டிபாளையம் சித்தேரியில் ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வசிகாமணி தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துணை தலைவர் மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.