பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தேர்தல் பிரசாரம்
தமிழகத்துக்கு நல்லது நடக்க திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பிரசாரம் செய்தார்.;
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட அண்ணா கிராமம் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்வேல்முருகன் உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடையே ஓட்டு கேட்டார்.
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பாதீர்கள். அது வெறும் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டவை. தி.மு.கவை நம்பி வாக்களியுங்கள். தகுதியான தலைமை நமக்கு கிடைக்கும். தமிழகத்துக்கு நல்லதும் நடக்கும் என்று கூறினார்.
அவருடன் கூட்டணி கட்சியின் தி. மு.க நிர்வாகிகள் மதிமுக நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.