பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் ரகளை

பண்ருட்டி அருகே ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் வாக்குவாதம்; திமுக கவுன்சிலர் தகாத வார்த்தையில் பேசி தாக்கியதால் பரபரப்பு

Update: 2021-07-15 14:08 GMT

பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அடிப்படைத் தேவைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அப்போது பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல், சாலை வசதி உள்ளிட்ட நிதி ஒதுக்கீடு சம்மந்தமாக குறித்து பேசியபோது அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் கரும்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், இந்த பணிகள் எதுவும் இதுவரை எங்கள் ஒன்றியத்திற்கு பணி ஆணை வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு திமுகவை சேர்ந்த கள்ளிப்பட்டு ஒன்றிய கவுன்சிலர்‌ ராஜசேகர் குறுக்கிட்டு உங்கள் ஒன்றியத்திற்கு அதற்குள் என்ன அவசரம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் மேசையில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலை ஜெயச்சந்திரன் மீது தூக்கி வீசி தகாத வார்த்தையில் பேசி, தாக்க முயன்றார்.

பெண்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டது முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து அண்ணாகிராமம் ஒன்றியத்தில் நடைபெற்ற இந்த முதல் கூட்டத்திலேயே திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

Tags:    

Similar News