கடலூர் மாவட்டத்தில்நிவாரணத்தொகை மற்றும் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை 2000 மற்றும் மளிகை தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது;

Update: 2021-06-15 13:32 GMT

நெல்லிக்குப்பத்தில் நிவாரணத்தொகை மற்றும் மளிகை தொகுப்பு வழங்கிய அமைச்சர் கணேசன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண இரண்டாவது தொகை 2000 மற்றும் மளிகை தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உடன் இருந்தார். கூட்டுறவு சங்க அரசு அதிகாரிகள் பண்ருட்டி வட்டாட்சியர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல குறிஞ்சிப்பாடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார்.

திட்டக்குடியில் சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் அவர்கள் பயனாளிகளுக்கு தொகுப்பு பொருட்களும் 2000 ரூபாய் வழங்கினார்.

நெய்வேலியில் சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் தொகுப்பு பொருட்களும் வழங்கினார்

சிதம்பரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

புவனகிரியில் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக அருண்மொழித்தேவன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ ஐயப்பன் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 தொகுப்பு மளிகை பொருட்களும் வழங்கினார்

Tags:    

Similar News