பணிநீக்கம்:அம்மா உணவக பணியாளர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கடலூரில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து பணி வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது.;
பண்ருட்டி நகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகம் ஊழியர்கள் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு ஒன்றினை அளித்தனர்.
அதில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 250 ரூபாய் ஊதியம் பெற்று 12 நபர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாகவும்,கொரோனா காலத்திலும், மழை,புயல்,வெள்ளம் காலத்திலும் உயிரை பணயம் வைத்து உணவு தயாரித்து வந்த நிலையில், இங்கு பணிபுரியும் 12 பெண்களில் 6 பேரை பணிக்கு வர வேண்டாம் என பண்ருட்டி நகராட்சி அதிகாரிகள் திடீரென தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதால், அங்கு அவர்களுக்கு தொடர்ந்து பணி செய்யவும், ஊதிய உயர்வு அளிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் கூறப்பட்டு இருந்தது.