பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் அடித்துக் கொலை-இளம்பெண்ணிடம் விசாரணை

பண்ருட்டி அருகே 4வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.;

Update: 2022-01-27 13:24 GMT
பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் அடித்துக் கொலை-இளம்பெண்ணிடம் விசாரணை

கொலை செய்யப்பட்ட சிறுவன் அஸ்வித்.

  • whatsapp icon

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தசெந்தில்நாதன்- தனலட்சுமி தம்பதியினரின் இரண்டாவது மகன் அஸ்வித் (வயது 4 )

நேற்று மாலை இவன் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று காணாமல் போனான். தகவலறிந்து அஸ்வித் தந்தை தாய் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அஸ்வித் கிடைக்கவில்லை.

குழந்தை காணாமல் போனது  சம்பந்தமாக முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில்  இன்று அதிகாலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவருக்குசொந்தமான முந்திரி தோப்பில் அஸ்வித் தலை மற்றும் உடம்பில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளான்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக முத்தாண்டிகுப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட ரஞ்சிதா (வயது 24 )என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்,

விசாரணையில் ரஞ்சிதா சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடித்ததாகவும், சிறுவனை அடித்து கொன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறுவன் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News