வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் நகைகள் கொள்ளை

Update: 2021-02-26 07:20 GMT

பண்ருட்டியில் தையல் தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி அருகே எல்.என்.புரம். எஸ்.எஸ்.கே. நகரில் வசித்து வருபவர் ஜெயராமன். தையல் தொழிலாளி. இவர் கடந்த 22-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராமன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 4 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை காணவில்லை.

ஜெயராமன் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து சுமார் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News