கடலூரில் இஸ்லாமிய ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2021-02-02 11:56 GMT

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அனைத்து ஜமாத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்யாணராமன் என்பவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதற்காக அவரை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக, காங்கிரஸ் ,நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் ஏராளமான இஸ்லாமியர்களும், பெண்களும் கலந்து கொண்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

Tags:    

Similar News