நெய்வேலியில் கொரோனா பரவல் காரணமாக கடைகள் இயங்க கட்டுப்பாடு
நெய்வேலியில் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என நெய்வேலி நகர வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது
கடலூர் மாவட்டத்தில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக நெய்வேலி,குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நகர நிர்வாக அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு. ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று முதல் 10-08-2021வரை (பால் மற்றும் மருந்து கடைகள் தவிர) அனைத்து கடைகளும் மாலை 5.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது என நெய்வேலி நகர வர்த்தக சங்க கூட்டமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர கட்டுப்பாட்டை அனைத்து வணிகர்களும் கடைபிடிக்கவும் சங்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெய்வேலி நகரில் வணிகம் செய்யும் கடை உரிமையாளர் மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக 10-08-2021ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நெய்வேலி நகர வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.