நெய்வேலியில் 3 ஆசிரியைகளுக்கு கொரோனா
நெய்வேலியில் 3 ஆசிரியைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.;
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் செப்டம்பர் முதல் தேதியில் அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி திறக்கப்பட்டன. 9 முதல் 12ம் வகுப்புகள் வரை சுழற்சி முறையில் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டம் நெய்வேலியிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.. இந்நிலையில் நெய்வேலியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் இரண்டு பெண் ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது கொரோனா தொற்று பாதித்த ஆசிரியர்கள் நெய்வேலி என்..எல்..சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கடலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும்கொரோனா உறுதி செய்யப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட மூன்று நாட்களில் நெய்வேலியில் மூன்று ஆசிரியைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டு இருப்பது பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.