வடலூரில் வரலட்சுமி விரதத்தையொட்டி கூட்டு பூஜையில் ஈடுபட்ட பெண்கள்

உலக மக்கள் ஆரோக்கியம் பெற வேண்டியும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உலகம் மீண்டு வரவும் பெண்கள் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்

Update: 2021-08-20 11:53 GMT

பூஜையில் பங்கேற்ற 51 சுமங்கலி பெண்களுக்கு ரிதன்யா சந்திரசேகர் பிரசாதம் வழங்கிய போது எடுத்த படம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படும். இந்த ஆண்டு ஆவணி மாதம் நான்காம் தேதியான இன்று பெண்கள் தங்கள் வீடுகளில் வரலட்சுமி நோன்பு இருந்தனர்.மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமியை வேண்டி வரலட்சுமி விரதம் இருப்பதால் எல்லா செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

என் சமூகம் அறக்கட்டளை மற்றும் நேவிகேட்டர் சுற்றுலா நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்துள்ள ஆபத்தாரணபுரம் செல்வ விநாயகர் ஆலயம், ஸ்ரீ அஷ்ட தசபுஜ மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரி ஆலயம் என 2 வரலட்சுமி பூஜை செய்ய நிறுவனத்தின் தலைவர் ரிதன்யா சந்திரசேகர் தலைமையில் சீனியர் அசோசியேஷன் நிர்வாகிகள் வரலட்சுமி பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கொரோனா நோய் தொற்று காரணமாக உலகம் அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகம் மீண்டு வரவும்,கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும், உலகமக்கள் ஆரோக்கிய வாழ்வு பெறவும், சமூக நல்லெண்ணத்தோடு பெண்கள் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.ஆலயத்தில் நடைபெற்ற வரலட்சுமி பூஜையில் பங்கேற்ற 51 சுமங்கலி பெண்களுக்கு புடவை, மஞ்சள் குங்குமம், பொருட்கள் உள்ளடக்கிய பிரசாதமாக ரிதன்யா சந்திரசேகர்  வழங்கினார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆலய வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட "கோ சாலை" யாகம் நடத்தி திறந்து வைக்கப்பட்டது.இந்த வரலட்சுமி பூஜையில் சுமங்கலி பெண்கள் மற்றும் வடலூர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News