குறிஞ்சிப்பாடி அருகே டிரான்ஸ்பார்மர் காப்பர் கம்பி திருட்டு

குறிஞ்சிப்பாடி நடுவீரப்பட்டு அருகே மின்சார டிரான்ஸ்பார்மரிலிருந்த காப்பர் கம்பி திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2021-06-05 13:45 GMT

மாதிரி படம்

குறிஞ்சிப்பாடி, நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு-குழந்தைக்குப்பம் செல்லும் வழியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரிலிருந்த காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

திருடு போன காப்பர் கம்பியின் மதிப்பு ரூ. 19 ஆயிரம் ஆகும். இது குறித்து இளமின் பொறியாளர் பிரபு கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News