குறிஞ்சிப்பாடியில் நடைபெறும் திட்டப்பணிகளை கடலூர் கலெக்டர் ஆய்வு செய்தார்

ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெறும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.;

Update: 2021-08-18 17:01 GMT

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி பூவாணிகுப்பம் ஊராட்சியில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனபுல் பயிர் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளையும், திருச்சோபுரம் பகுதியில் 15 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் பிரபாகரன், மண்டல இணை இயக்குனர் குபேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ், சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் ரத்தினகுமார், நவீன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News