அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது: அச்சத்தில் மாணவ மாணவிகள்.

குறிஞ்சிப்பாடி அருகே ஆயிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அச்சத்தில் மாணவ மாணவிகள்.

Update: 2021-12-18 14:56 GMT

ஆயிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து காரைகள் பெயர்ந்து விழுந்தது

நெல்லை மாவட்டத்தில்  அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் கழிவறைக் கட்டடம் நேற்று காலை இடிந்து விழுந்தது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மேலும், சில மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆயிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரையில்  இருந்து காரைகள் பெயர்ந்து விழுந்தது, இதனால்  அச்சமடைந்த ஆசிரியர்கள் மற்றும்  மாணவ மாணவிகள் அலறி அடித்துக்கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர்.

இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் வாயிலாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டது. , இந் நிலையில் இன்று மேலும் பள்ளி கட்டிட மேற்கூரை உதிர்ந்து சேதமடைந்தது. இதனால் இங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகள் மரத்தடியில் அமரவைத்து கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெய்த கன மழையினால் பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்து இருக்கிறது பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்தபிறகு பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்த நிலையில் சேதமடைந்த மற்றும் பழைய கட்டிடங்களில் மாணவ மாணவிகள் கல்வி பயில்வது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும்  நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் நெல்லையில் பள்ளி தடுப்பு சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் நடைபெறாமல் இருக்க பள்ளி கல்வித் துறையும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. 

Tags:    

Similar News