பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா

நான்கு ஆசிரியர்கள் ஒரு மாணவன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் 26 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

Update: 2021-09-07 16:20 GMT

 குறிஞ்சிப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் 

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது. வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி திறந்த மறுநாளே கடலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நான்கு ஆசிரியர்கள் ஒரு மாணவன் என இதுவரை பள்ளி திறந்த ஆறு நாட்களில் ஐந்து பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனாவால் பள்ளி மாணவ மாணவிகளை கண்காணிக்க கடலூர் மாவட்டத்தில் 26 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அறிவுறுத்தலின்படி தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் கொரானா கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பெண்கள் சிறார்களுக்கு  எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News