குறிஞ்சிப்பாடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
குறிஞ்சிப்பாடியில் உள்ள கடைகளில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.;
பெட்டிக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
குள்ளஞ்சாவடி, ஆலப்பாக்கம், சாலை ஓரங்களில் உள்ள மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒரு கடையில் சுமார் 2 கிலோ (50 பாக்கெட்கள்) அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாெருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர். அதேபோல் மூன்று கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுமார் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த திடீர் சோதனையில் நியமன அலுவலர் பி.கே. கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பெ.நல்லதம்பி, சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியன் ஆகிய குழுவினர் ஆய்வு நடத்தினர்.