வடலூர் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை

மன அழுத்தம் காரணமாக பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2021-11-25 18:37 GMT

தற்கொலை செய்து கொண்ட பெண் கிராம நிர்வாக அதிகாரி ஜெயஸ்ரீ.

கடலூர் டமாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் ரைஸ் மில் தெருவில் வசிப்பவர் நாராயணசாமி இவரது மகள் ஜெயஸ்ரீ.இவர் நெய்வேலி வடக்கு சேப்ளாநத்தம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த நிலையில்,கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இவருக்கு கருவுற்ற எட்டு மாதத்தில் வயிற்றிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் பணி செய்யும் இடத்திற்கு வேறு ஒருவர் பணிமாறுதல் பெற முயற்சி செய்ததாலும் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் மன நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்

மன அழுத்தம் காரணமாக தனது தந்தை வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவருக்கு திருமணமாகி ஆறு வருடம் ஆன நிலையில் பணியின் காரணமாக வடலூரில் உள்ள தந்தை வீட்டில் ஐந்து வருடங்களாக தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார்.

இறந்த ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே  5 வயதில் ஹர்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.பெண் கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News