குறிஞ்சிப்பாடியில் அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் திருவந்திபுரம் தேவநாத சுவாமியை வழிபட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அவருடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இராம.பழனிச்சாமி மற்றும் சி.கே. சுப்ரமணியம் உடன் இருந்தனர்.
திருவந்திபுரம் கே.என்.பேட்டை பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு கட்சிக்காரர்கள் ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்தும் மலர்தூவியும் வரவேற்றனர். அவருடன் ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.