கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது.;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில் தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.க .செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் மார்ச் 1ல் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு அமோக வெற்றி தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், டவர் செயலாளர் ராஜா மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.