கடலூரில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய தொண்டு நிறுவனம்

கடலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய தொண்டு நிறுவனம்

Update: 2021-06-24 08:44 GMT

கடலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய தொண்டு நிறுவனம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் சானிடேஷன் பர்ஸ்ட் நிறுவன நிதியுதவியுடன் சி.எஸ். டி தொண்டு நிறுவனம் இணைந்து கொரோனா பெருந்தொற்று தடுப்புப்பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது.

நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி அனைவருக்கும் முக கவசம், கை சுத்திகரிப்பான், போன்றவை கைகள் தொடாமல் கால்களை பயன்படுத்தி கைகழுவுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும். 

மேலும் கொரோனா விழிப்புணர்வு வாகனம் கிருஷ்ணாபுரம் வட்டாரத்தில் எல்லா கிராமங்களிலும் முகக்கவசம் அணிவது கைகளை சோப்புப்போட்டு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.

கடலூர் மாவட்டத்தில் மூன்று மருத்துவமனைகளில் முகக்கவசம் 2000, கையுறை 5000 கிருமிநாசினி மற்றும் கருவி -30, கைதொடாமல் கைகழுவும் வசதி -15 மாதவிடாய்கால பராமரிப்பு பொருட்கள்-225, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் - 2 முதலியவை வழங்கப்பட்டது.

சானிடேஷன் பர்ஸ்ட் முதன்மை அலுவலர் பத்மப்ரியா மற்றும் சி.எஸ்.டி செயலாளர் ஆறுமுகம் அவர்களிடமிருந்து துணை இயக்குனர் சுகாதார பணிகள் கடலூர் மாவட்டம் செந்தில்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டு மருத்துவமனைகளுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை முதன்மை மருத்துவர் மகேஸ்வரி,செவிலியர் கண்காணிப்பாளர் நிர்மலா சானிடேஷன் பர்ஸ்ட் நிஷா சி.எஸ். டி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்

Tags:    

Similar News