கள்ள சாராயம் குடித்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
கடலூர் மாவட்டம் புலியூர் அருகே கள்ள சாராயம் குடித்து 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.;
கடலூர் மாவட்டம் புலியூரில் மூன்று மாணவர்கள் 10. 11. 12ஆம் வகுப்பு படிப்பவர்கள் விளையாடிவிட்டு நேற்று மாலை புலியூர் காலனி மகேந்திரன் என்பவர் வீட்டு அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய பாவை குடித்துள்ளனர். இதனால் மயக்கமடைந்த மூவரையும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இது சம்பந்தமாக குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பூபாலன், என்பவர் கைது செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோய் ஊரடங்கு காலத்தில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 20.5 .2021 தேதி முதல் இதுவரை 290 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 304 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 26 பேர்கள் தலைமறைவாக உள்ளனர். 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.