சித்தருக்கு காவடி எடுத்து வழிபடும் கிராமம்

புவனகிரி அருகே சித்தருக்கு 112 ஆண்டுகளாக காவடி எடுத்து வழிபாடு செய்து வரும் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள்

Update: 2022-03-08 06:20 GMT

சித்தருக்கு காவடி எடுத்து வழிபாடும் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்தர்க்கு காவடி விழா எடுத்து வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அனைத்து இடங்களில் தெய்வங்களுக்கு காவடி விழா எடுத்து வழிபாடு செய்து வரும் நிலையில் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் முற்றிலும் மாறுபட்ட விதமாக இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த பல்லாரி சித்தர்க்கு காவடி எடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

இந்தாண்டு நடைபெற்ற 112 வது காவடி விழாவில் பால், பன்னீர், புஷ்ப, அலகு காவடி என் பல வகைகளில் காலடிகளை சுமந்து கிராமத்தின் வீதிகளில் காவடி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது கிராமமக்கள் புனித நீர் கொண்டு காவடி எடுத்து வருபவரின் பாதங்களை கழுவி தீபமேற்றி வழிபாடு செய்தனர். இதனால் ஒவ்வொரு இல்லங்களிலும் அமைதி தழைத்து செல்வம் தங்கும் என்பது நம்பிக்கை.

இவ்விழாவைக்கான சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவடி விழாவில் சித்தரின் அருளாசி பெற்றனர். இத்திருவிழாவை கிராம இளைஞர்கள் முன்னின்று நடத்தினார்.

Tags:    

Similar News