புவனகிரி பேரூராட்சியில் பழுதான வாக்கு இயந்திரம்: வெயிலில் உலர வைத்த அதிகாரிகள்

புவனகிரி பேரூராட்சியில் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம். 8 மணி நேரமாகியும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கவில்லை.

Update: 2022-02-22 14:14 GMT

புவனகிரி பேரூராட்சியில் வெயிலில் உலர வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.

கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 6 நகராட்சி 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 90 சதவீதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 17 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. புவனகிரி பேரூராட்சி 4 வது வார்டில் 5 பேர் போட்டி இட்டனர். 827 வாக்குகள் பதிவான நிலையில் காலை 10 மணி அளவில் வாக்கு இயந்திரம் பழுதாகி பதிவான விவரங்களை காட்டப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பழுது நீக்கும் பணியில் இதுவரையிலும் ஐந்துக்கும் மேற்பட்ட பில் இன்ஜினியர்கள் ஈடுபட்டும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை கண்டுபிடிக்க முடியவில்லை, இயந்திரத்தை சரி செய்யவும் முடியவில்லை. கடந்த 8 மணி நேரமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முடிவுகள் தெரியாததால் தேர்தல் நடத்தும் அதிகாரி மீது அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்து இருப்பதால் முறையாக வாக்குகள் எழுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது மேலும் புவனகிரி பேரூராட்சியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமெனவும் வேட்பாளர்கள் கோரிக்கை‌ வைத்து வருகின்றனர். 8 மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரி செய்யாதது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News