கள்ளக் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர்-கட்டி வைத்து அடித்த ஊர் மக்கள்

சேத்தியாத்தோப்பு அருகே கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த கிராம மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.;

Update: 2021-12-27 16:59 GMT

கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி செல்வி . இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உண்டு. இந்நிலையில் செல்வி குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். செல்வி பல்வேறு கூலி வேலைகள் செய்து வருகிறார்.

மற்றும் மன அமைதி பெறுவதற்காக வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதுமாக இருந்துவந்தார். அப்போது அவருக்கு ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேவ புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர்களது கள்ளக்காதல் கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களுக்குள் சில நாட்கள் முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் இருவரும் பேசாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று மாமங்கலம் கிராமத்திற்கு வந்த திருநாவுக்கரசு செல்வியிடம் ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அலறி துடித்தவாறு படுகாயம் அடைந்த செல்வியை கிராம மக்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தப்பி ஓடிய திருநாவுக்கரசை கிராம மக்கள் விரட்டிச் சென்று பிடித்துமரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக சோழத்தரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் திருநாவுக்கரசை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பழகி வந்த கள்ளக்காதலி திடீரென பேசாமல் இருந்ததால் விரக்தியில் கள்ளக்காதலி கழுத்தை அறுத்த வாலிபரின் வெறிச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News