தீயணைப்புத்துறை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்

பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய தீ என்னும் செயலியை விளக்கினார்;

Update: 2021-01-31 15:01 GMT

கடலூரிலிருந்து சிதம்பரத்திற்கு சைக்கிளில் தமிழக தீயணைப்புத்துறை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் வருகை தந்தார் சிதம்பரம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் வந்த சைலேந்திரபாபு அங்கு தீயணைப்பு துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு பொதுமக்கள் உதவிக்காக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் உயிர்கள் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தீ என்னும் செயலியை விளக்கி இந்த செயலியை பொதுமக்கள் அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சைலேந்திரபாபு நிருபர்களிடம் தெரிவித்தார்.



Similar News