குமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

கன்னியாகுமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2021-11-15 12:30 GMT

கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத ஒரு பாதிப்பை சந்தித்துள்ளது. மாவட்டத்தில் 60 மேற்பட்ட கிராமங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்து வரும் நிலையில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை துண்டிக்கப்பட்டு இருப்பதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

மேலும், 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆவது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது, இப்படி பெரும் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டு உள்ள நிலையில்,  இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாதிப்புகளை நேரில் பார்த்து ஆய்வு செய்வதற்காக,  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குமரிக்கு வருகை தந்தார். 

தொடர்ந்து, பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர், இதுவரை  எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, குமரி  மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தமிழக முதல்வருடன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்பட பலர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News