சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் சாவு

சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் முறிந்து விழுந்து பாதுகாப்புப்பணியில் இருந்த பெண் காவலர் உயிரிழந்தார்.

Update: 2021-11-02 04:24 GMT

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே மழை காரணமாக பழமையான மரம் பெயர்ந்து விழுந்தது.

இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பெண் காவலர் கவிதா (வயது 31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போக்குவரத்து காவலர் ஒருவர் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இதனைத்தொடர்ந்து வேரோடு சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News