சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சென்னையில் இருந்து மங்களூரு வரை இயக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் பணிமனையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் இரு பெட்டிகள் மட்டும் தடம்புரண்டன.
இதனைக் கண்ட ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே அதிகாரிகள், தடம்புரண்ட பெட்டிகளுக்கு பதிலாக மாற்று பெட்டிகளை இணைத்து ரயிலை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அனுப்பினர்.
ரயில் பெட்டிகள் காலியாக இருந்ததால், இந்த விபத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.