பாலியல் வழக்கு: ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி!
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.;
சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகேபோலன். இவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். அதன்படி அவர் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது இதுவரை 6 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இந்தநிலை8யில் சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 5 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இதேபள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியர் சிக்கிய நிலையில், ராஜகோபலனை விசாரிப்பதன் மூலம் மேலும் பல பாலியல் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.