திமுக எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் கட்சி: அமைச்சர் சேகர் பாபு

திமுக எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் கட்சி என்று அயனாவரம் கோயில் ஆய்வு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு கூறினார்

Update: 2022-03-03 06:21 GMT

அயனாவரம் சர்வ சக்தி விநாயகர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், அயனாவரம் மேட்டு தெரு பகுதியில் இருக்கின்ற சர்வ சக்தி விநாயகர் திருக்கோயில் என்பது 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. கோவிலின் மேம்பாட்டுக்கு என்னென்ன செய்ய வேண்டும், பக்தர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எந்தவொரு அரசியல் கலப்பும் இல்லாமல், சிறப்பாக சிவராத்திரி விழா நடத்தப்பட்டது. பக்தர்கள் எந்த கட்டணமும் இல்லாமல், சிறப்பாக தரிசனம் செய்தனர். வரும் காலங்களில் சிவராத்திரி விழா இன்னும் மிக சிறப்பாக நடத்தப்படும். அதுமட்டுமின்றி திமுக எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் கட்சி என்றும், எங்களுக்கு ஆத்திகர்களும் வாக்களித்திருக்கிறார்கள், நாத்திகர்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

கோவில் விழாக்கள் நடத்துவது குறித்த கி.வீரமணி கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர், கருத்து பரிமாற்றங்களை சுட்டி காட்டுவதை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை, இது இந்தியா, இங்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சிலை மயில் காணாமல் போனது குறித்து பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில், புதிய திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறிய அமைச்சர் சேகர்பாபு, பாமக  சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிழல் நிதிநிலை அறிக்கையில் நல்ல திட்டங்கள் இருந்தால் அவை எடுத்துக்கொண்டு செயல்படுத்தப்படும் என்றார்..

Tags:    

Similar News